Spotlightசினிமா

அஜித்-நயன்தாராவுக்காக உருவாகும் பிரம்மாண்ட அரங்குகள்!

விவேகம் படத்தை அடுத்து அஜித் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

குடும்பம், காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள் ஆகிய அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக விசுவாசம் தயாராக இருக்கிறது.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக ஐதராபாத்தில், மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. அஜித்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காதல் மற்றும் பாடல் காட்சிகளை அந்த அரங்கில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close