
– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!
தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
Rough Note Production தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுணன் , சுனில் ஷெட்டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலசந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆடியோ வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Traiser
Facebook Comments





