
எழுத்து & இயக்கம் ரத்னகுமார்
நடிகர்கள்: விது, ப்ரீத்தி அஸ்ரானி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், கிரன், சிந்து ஷ்யாம், பிரேம்குமார், ஆதிரா, ஆறுமுகவேல், ஷேனாஸ் பாத்திமா, சதீஷ்குமார்,
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: லோகேஷ் கனகராஜ் & கார்த்திகேயன்
ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்
கதைப்படி,
29 வயதில் தனக்கென்று ஒரு இலட்சியம் எதுவுமின்றி, தனது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் விது. அதே அலுவலகத்தில் கதாநாயகியான ப்ரீத்தியும் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் காதல் தொற்றிக்கொள்ள, தன்னையும் ஒரு அழகான பெண் காதலிக்கிறாரே என்று உலகம் மறந்து ப்ரீத்தியை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
தொடர்ச்சியாக காதல் நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தனக்கான அடையாளமான தனக்கான இலட்சியமான ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்கினை நோக்கி செல்லவும் தயாராகிறார் ப்ரீத்தி. அதற்காக தனது காதலை சற்று தள்ளியும் வைக்கிறார். முழுக்க முழுக்க ப்ரீத்தியை மட்டுமே தனது மனதிலும் இதயத்திலும் நிறைத்து வைத்திருந்த விது, ப்ரீத்தி தள்ளிச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால், இருவருக்கும் பிரிதல் ஏற்பட, தனக்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கிறார் விது. இறுதியில் என்ன நடந்தது.? பிரிந்த காதல் இணைந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ரெட்ரோ படத்தில் வில்லனாக மிரட்டிய விது, இந்த படத்தில் இளையராஜாவின் மெலடி பாடலாக தென்பட்டிருக்கிறார். அப்படியான ஒரு மென்மை முகமாகவும், யாருக்கும் வெறுப்போ, கோபமோ வராத ஒரு அப்பாவித்தனமான ஒரு முகத்தோடு தனது உட்ச நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும், தனது நடிப்பின் திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அழகு தேவதையாக காட்சியளித்திருக்கிறார் ப்ரீத்தி. அயோத்தி படத்தில் வெளிப்படுத்திய ஒரு நடிப்பை இப்படத்தில் அவர் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தின் அழகையும் தனது முகத்தின் நடிப்பிலிருந்து அவர் வெளிப்படுத்தி படத்தினை மெருகேற்றியிருக்கிறார்.
இருவருக்கும் இடையேயான chemistry மிகவும் natural-ஆக இருந்துள்ளது.
விதுவின் நண்பராக நடித்தவர், அம்மாவாக நடித்த ஆதிரா, அப்பாவாக நடித்தவர், ப்ரீத்தியின் அம்மாவாக நடித்தவர் என் அனைவரும்மே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றனர். மாஸ்டர் மகேந்திரன் தனது ஆக்ரோஷனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராமத்திலிருந்து பட்டணம் நோக்கி வந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கையையும் ஒரு நிமிடம் கிளறி பார்த்துவிடுகிறது இந்த “29”. ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்து நம்மை கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். மிகவும் இயல்பான ஒரு மேக்கிங், வாழ்வியலை அப்படியே திரையில் காண்பித்தது என படத்தில் நிறைய பாசிடிவாக வைஃப் இருப்பதால், நம்மை படம் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
ஏரி மீட்பு, நான் யார் என்று இளைஞனின் தேடல், வாழ்க்கையின் அடுத்த கட்டம், விவசாயியின் பெருமை, என படத்தில் ஏராளமான மெசேஜும் சொல்லப்பட்டுள்ளது. பார்க்கை க்ளீன் பண்ணும் காட்சி, க்ளைமாக்ஸில் ஏரியை பார்க்கும் காட்சி, க்ளைமாக்ஸில் விதுவும் ப்ரித்தியும் பேசும் கலந்துரையாடல், என படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் ஏராளம்.
கதைக்குள் நாம் பயணித்துவிட்டால், அது செல்லும் வேகத்திற்கு நாமும் எளிதாக பயணப்பட்டு விடலாம்… இல்லையென்றால் நமக்கு அது மெதுவாக நகர்ந்து செல்வது போன்று தான் தோன்றும்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறிவிடலாம். ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது.
சில இடங்களில் படம் மெதுவாக நகர்வது போல தோன்றினாலும், climax மற்றும் emotional writing அந்த குறையை மறக்க வைக்கிறது.
மொத்தத்தில்,
29 – தேடல்..





