சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், எஸ்.வி.சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதியில்லை என தெரிவித்ததால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், நடிகர் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய, தமிழக அரசு தயக்கம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால் இன்னமும் எஸ் வி சேகர் கைது செய்யப்படவில்லை எனவும் தனது குற்றச்சாட்டினை பதிவு செய்தார்.
Facebook Comments