
சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்தப் படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர், சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas ) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) நிறுவனம் படத்தை வழங்குகிறது.
இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி
கலை இயக்கம் : பங்களன்
நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
சண்டை பயிற்சி : V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்





