Spotlightசினிமா

பிறந்தநாளை படைப்பாளிகளின் திருநாளாக்கிய துஷாந்: குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாண்டிராஜ், கணேஷன், நடிகைகள் அஸ்மிதா, ஷியமளா, ஸ்டண்ட் யூனியன் தலைவர் டான் அசோக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய துஷாந், “இந்த குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவுக்கு வந்திருக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.” என்றார்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான கணேஷன் பேசுகையில், “நான் திரைப்படத்துறையில் 35 ஆண்டுகளாக இருக்கிறேன். ‘தர்பார்’ வெற்றி விழாவில் பாராட்டு தெரிவிப்பதற்காக என்னை அழைத்த போது, அந்த நிகழ்ச்சியில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதாவது, ரூ.100 கோடி, 200 கோடி என்று பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நீங்கள் ரூ.3 கோடி, ரூ.5 கோடியிலும் படம் தயாரிக்க வேண்டும், அப்படி தயாரித்தால் திறமை மிக்க இளைஞர்கள் மற்றும் புதிய சிந்தனை உள்ளவர்கள் சினிமாவுக்கு வருவார்கள், சினிமாத்துறையும் வளர்ச்சி அடையும் என்றேன். ஆனால், அவர்கள் அதை கேட்காமல், தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் தான் படம் தயாரித்தார்கள். அதேபோல், ஈழத்தில் இருந்து பணத்துடன் வருபவர்களை இங்கே சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு சில இயக்குநர்கள் பணத்துடன் வரும் ஈழத் தமிழர்களை ஏமாற்றி, அவர்களை துண்ட காணோம், துனிய காணோம் என்று ஓட வைத்து விடுவார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் தம்பி துஷாந் சிறு சிறு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அவரை நான் பல வருடங்களாக அறிவேன், அவரது இத்தகைய நிதானமான முன்னேற்றம் அவரை மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

படம் தயாரிப்பதோடு இல்லாமல் இப்படி ஒரு பிரமாண்டமான குறும்பட போட்டி நடத்தி விருது வழங்கும் விழாவை நடத்தி அனைவரையும் வியக்க வைத்து விட்டார். அவர் இந்த குறும்பட போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டும், பல படங்களை தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மைக்ரோ பட்ஜெட்டில் கதை வைத்திருந்தால் என்னை அனுகலாம் நான் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல், புதிதாக படம் இயக்குபவர்களுக்கு எந்தவித சம்பளமும் இன்றி உதவி இயக்குநராக பணியாற்றவும் தயாராக இருக்கிறேன். சினிமா பற்றிய சந்தேகங்கள் மற்றும் விபரங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.” என்றார்.

நடிகர் முருகானந்தம் பேசுகையில், ”இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடக்கும் இந்த நாள் இதன் ஒருங்கிணைப்பாளர் துஷன்ந்தின் பிறந்தநாளாகும். பிறந்தநாளன்று ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்குவது, கேக் வெட்டி கொண்டாடுவது என்று அனைவரும் செய்வார்கள். ஆனால், துஷாந் அவரது பிறந்தநாளில் இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலரின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். இதுபோல் அவரது பிறந்தநாளில் நல்ல விசயங்களை செய்வார் என்றால், ஆண்டுக்கு நான்கு பிறந்தநாள் கூட அவர் கொண்டாடலாம் தவறில்லை.

பொதுவாக பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால் அவர்களது பெற்றோரை பாராட்டுவோம். திருமணத்திற்குப் பிறகு மனைவியை தான் பாராட்ட வேண்டும். அப்படி தான் நான் துஷன்ந்த் மனைவியிடம் உங்கள் கணவரை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள், என்று கூறினேன். அந்த அளவுக்கு அவர் மிக சிறந்த மனிதராக இருக்கிறார். அவரது இந்த முயற்சி பலரது எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். நான் உதவி இயக்குநராக சேருவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன். அப்போது எங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான தளங்கள் இல்லை, மேடை கிடைக்காது. ஆனால், இங்கிருப்பவர்களுக்கு இந்த குறும்பட போட்டி மூலம் சிறப்பான மேடை கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி நீங்கள் அனைவரும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் சுஜித் பேசுகையில், “துஷாந் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் இப்படி ஒரு குறும்பட போட்டி நடத்தியதற்கு பாராட்டுகள். இங்கிருக்கும் இளைஞர்கள் இப்படி ஒரு குறும்பட போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், வாழ்த்துகள்.” என்றார்.

நடிகர் திலீபன் பேசுகையில், “துஷாந்தை நான்கு வருடங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். அவர் ஒரு படம் தயாரித்து, ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் நான் நடித்தேன், மிக சிறப்பாக வந்தது. அவர் கதைக்கு எது தேவையோ, எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்யக்கூடியவர். இலங்கையில் பிறந்து, லண்டனில் பணியாற்றி இப்போது தமிழ் சினிமாவில் நமக்காக வந்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் அவர். சமீபத்தில் ஒரு மிகப்பெரிய அலுவலகம் போட்டு டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு என்னை அழைத்த போதே, பெரிய அளவில் ஏதோ செய்யப் போகிறார், என்று நினைத்தேன். அதன்படி, இப்படி ஒரு மிகப்பெரிய குறும்பட போட்டியை நடத்தியிருக்கிறார். இந்த போட்டி பலருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை தரப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

எங்களது காலக்கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் தான் கேமராவையே பார்க்க முடியும், மற்றபடி இப்போது இருப்பது போல் சிறிய அளவிலான கேமராவை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த முடியாது. ஆனால், இப்போது உள்ள தலைமுறையினருக்கு இதுபோன்ற குறும்பட போட்டிகள் அவர்களது திறனை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமைந்திருக்கிறது. எனவே இதை சரியாக பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். இதுபோன்ற போட்டியில் பரிசு பெறுவது வெற்றி அல்ல, பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றி தான். எனவே, இதில் பங்கேற்ற அனைவரும் நல்ல திரைப்படங்கள் இயக்கி இயக்குநராக வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

விமல் ராம்போ பேசுகையில், “துஷன்ந்த் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முதல் முறையாக குறும்பட போட்டியில் பங்கேற்றவர்கள், இதை சரியாக பயன்படுத்தி நல்ல நிலைக்கு வர வேண்டும். உங்களது படைப்பின் மூலம் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும், நாங்களும் நன்றாக இருக்க வேண்டும், நன்றி.” என்றார்.

நடிகர் முல்லை பேசுகையில், “வருங்கால இயக்குநர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த குறும்பட போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளார்கள், அதில் 10 பேர் தேர்வாகி அவர்களில் மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட இருக்கிறது. இருந்தாலும் இங்கிருக்கும் அனைவரும் இயக்குநர்கள் தான், உங்களது படத்தில் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வை பார்க்கும் போது எனக்கு அப்துல் கலாம் மற்றும் பாரதியார் தான் நினைவுக்கு வருகிறார்கள். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். நீங்கள் கனவு கண்டுள்ளீர்கள். பாரதியார் கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொன்னார். உங்களது கனவை இந்த குறும்பட போட்டி மூலம் துஷாந் சார் மெய்ப்பட வைத்திருக்கிறார். சினிமா தான் மதம் உள்ளிட்ட எந்தவித வேற்றுமையும் பார்க்காது, அப்படி இங்கு அனைவரும் ஒன்றாக கூடியிருக்கிறோம், நிச்சயம் நீங்கள் இந்த குறும்பட போட்டி மூலம் நல்ல இடத்திற்கு செல்வீர்கள், வாழ்த்துகள்.” என்று கூறி ஒரு பாடலையும் பாடினார்.

நடிகை அஸ்மிதா பேசுகையில், “துஷாந் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த குறும்பட போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். மிக சிறப்பான நிகழ்ச்சி, இதற்காக கடினமாக உழைத்த அனைவரையும் கைதட்டி பாராட்ட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை ஷியமளா தத்தராஜ் பேசுகையில், “துஷாந் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த குறும்பட போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியின் மூலம் துஷன்ந்த் சார் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அவரது வெற்றி தொடர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநரும் நடிகருமான பேரரசு பேசுகையில், “இன்று ஒரு முக்கியமான நாள், எங்கள் விஜய், உங்கள் விஜய்க்கு பிறந்தநாள். நடிகராக அவர் பல பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். ஆனால், முதல்வராக கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இன்றைய நாளில் துஷாந்தும் பிறந்தநாள் கொண்டாடுவது சிறப்பு. விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவர் பிறந்த மருத்துவமனைக்கு சென்று, அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் பரிசு வழங்குவார். எனவே இன்று பிறந்தநாள் காணும் துஷன்ந்துக்கு இந்த குறும்பட விழா மோதிரமாக அமைந்திருக்கிறது. விஜயிடம் கதை சொல்லி ஓகே ஆகிவிட்டால், மூன்று கண்டிஷன் போடுவார். ஒன்று, ஞாயிற்றுக்கிழமையில் படப்பிடிப்பு வைக்க கூடாது, இரண்டு மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு இருக்க கூடாது, அப்படி இரவு படப்பிடிப்பு இருந்தால் மறுநாள் படப்பிடிப்பு வைக்க கூடாது, மூன்று என் பிறந்தநாளில் படப்பிடிப்பு இருக்க கூடாது, என்பார். காரணம், ஒவ்வொரு பிறந்தநாளிலும் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் இந்த கண்டிஷனை போடுவார். அவர்களால் தான் இந்த நிலையில் நான் இருக்கிறேன், எனவே அவர்களை மறக்க கூடாது என்பதால் அவர்களுக்காக என் பிறந்தநாளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அவரது அந்த எண்ணம் தான் இன்று தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறது.

இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் துஷாந்துக்கு என் பாராட்டுகளும், நன்றியும். எங்கள் காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் வாங்குவதே பெரிய விசயமாக இருக்கும். இங்கு பேசியவர்கள் உதவி இயக்குநராக இருக்கும் போது எதிர்கொள்ளும் கஷ்ட்டங்களை சொன்னார்கள், நான் சொன்னால் அதற்கே பத்து நாட்கள் ஆகும். கஷ்ட்டங்களை தாண்டி நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும். கதை சொல்ல நேரம் தர மாட்டார்கள், அப்படியே தந்தாலும் மதிக்க மாட்டார்கள், நிற்க வைத்து கதை கேட்பார்கள். நான் அப்படி பல சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை, துஷாந் ஏற்படுத்திய இந்த மேடை மூலம் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநராகவோ, உதவி இயக்குநராகவோ பயணிக்க போகிறீர்கள். எனவே துஷன்ந்தின் இந்த முயற்சி வரவேற்க வேண்டியது, இது தொடர்ந்து நடக்க வேண்டும்.

துஷாந் தங்க முட்டை போடும் வாத்து, அவர் வயிற்றை கிழிப்பது போன்ற சம்பவங்கள் இங்கு நடக்க கூடாது. அவர் கொஞ்சம் உஷாராக தான் இருக்கிறார், மிக தெளிவாக இருக்கிறார். அதனால் தான் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், இது தான் பட்ஜெட் என்று முதலிலேயே சொல்லி, அதற்கு ஏற்றவாறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்கிறார். அப்படி குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் எடுத்தால் அதை எப்படியாவது வியாபரமாக்கி போட்ட பணத்தை எடுத்து விடலாம். அப்படியே எதாவது நடந்தால் மூழ்கிவிடாமல் சமாளித்துக் கொள்ள முடியும். இந்த தெளிவு துதுஷாந்திடம் இருப்பதால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது. சினிமா போல் ஒரு சிறந்த தொழில் எதுவுமில்லை. இங்கு இயக்குநர்கள், மேனேஜர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க டிக்கெட் கிழிப்பவர்கள் என பலர் நேர்மையாக இருந்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்ட்டம் என்பதே வராது. நூறு பேர் நேர்மை இல்லாதவர்களாக இருப்பதால் தான் தயாரிப்பாளர்கல் பலர் நஷ்ட்டமடைகிறார்கள். புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கும் போது எதுவும் தெரியாமல் வருகிறார்கள், படம் முடியும் போது தான் சினிமா பற்றி தெரிந்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் நஷ்ட்டம் அடைவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி அவதிப்படுகிறார்கள். துஷாந் அப்படி இல்லாமல் மிக தெளிவான முறையில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், அவர் மூலம் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த குறும்பட மேடையில் இருப்பவர்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நிச்சயம் இவர்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநர்களாக வருவார்கள், வாழ்த்துகிறேன்.

இந்த மேடையில் முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இன்று கோவில்களில் விற்கப்படும் தின்பண்டங்களில் அச்சிடப்பட்ட விலைக்கு தான் விற்பனை செய்ய வேண்டும், கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதுபோல் திரையரங்கு கேண்டீன்களிலும் தின்பண்டங்கள் விற்பனையில் கட்டுப்பாடு போட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாய் கூடுதலாக விற்கலாம், 50 ரூபாய் பொருளை 70 ரூபாய்க்கு விற்கலாம், ஆனால் 250 ரூபாய்க்கு விற்பது சரியில்லை. இதனால் தான் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வர பயப்படுகிறார்கள். டிக்கெட் விலை சரியாக தான் இருக்கிறது, ஆனால் திரையரங்கில் விற்கப்படும் உணவு வகைகளின் விலை தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. கோவில்களுக்கு கட்டுப்பாடு விதித்தது போல், திரையரங்க கேண்டீன் உணவு விற்பனைக்கும் முதல் விஜய் தலைமையிலான தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கோவில்கள் மட்டும் உங்கள் ஆட்சிக்கு உட்பட்டது இல்லை, திரையரங்குகளும் உங்கள் ஆட்சிக்கு உட்பட்டது தான். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு சரி செய்தால், சினிமா தொழில் வளரும், சிறிய முதலீட்டு படங்களும், அதன் தயாரிப்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். விஜயும் ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் நடித்து வந்தவர் தான், அதனால் அவருக்கு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் கஷ்ட்டம் புரியும். எனவே, இந்த பிரச்சனைக்கு முதல்வர் விஜய் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் தேர்வான சில குறும்படங்களை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. பிள்ளைகள் ஒழுக்கமாக வளர வேண்டும் என்றால் தந்தை என்ன செய்ய வேண்டும், என்ற விசயத்தை அருமையாக ஒரு படத்தில் சொல்லியிருந்தார்கள். இப்படி பல குறும்படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. குறும்படங்கள் சாதாரணமானது அல்ல, நெருப்பு போன்றது அதை வைத்து சமூகத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்லலாம். எனவே, இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்கள் எதிர்காலத்தில் பல நல்ல படங்களை இயக்குவார்கள் என்ற நம்பிக்கை இருகிறது. துஷாந் இவர்களின் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்துக் கொடுத்ததோடு, இவர்களில் நல்ல கதை வைத்திருப்பவர்களுக்கு படம் இயக்க வாய்ப்பும் கொடுக்க இருக்கிறார். அவர் ஆர்.பி.செளத்ரி சார் போல் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும், இந்த குறும்பட போட்டியும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா பேசுகையில், “துஷாந் அவரது பிறந்தநாளில் மிக சிறந்த விசயத்தை செய்திருக்கிறார். இந்த குறும்பட போட்டி பலரது கனவை நிறைவேற்றப் போகிறது. இந்த நிகழ்ச்சியை துஷன்ந்த் ஒவ்வொரு ஆண்டும் செய்து, அவரது பிறந்தநாளை குறும்பட தினமாகவே கொண்டாட வேண்டும், அப்படி செய்தால் நல்லது தான், பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். வைரமுத்து சார் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “கண்ணே கொஞ்ச மறைமுகம் தேவை, கப்பல் ஒதுங்க துறைமுகம் தேவை, வாழ்க்கையில் முன்னேற நல்ல மனிதர்களின் அறிமுகம் தேவை” என்று சொன்னார். அதுபோல், உங்களுக்கு துஷாந் என்ற நல்ல மனிதரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரும் நல்ல நிலைக்கு செல்ல உள்ளீர்கள். சினிமா என்பது சாதாரண விசயம் இல்லை, கலையின் உச்சம். இப்படிப்பட்ட சினிமாவில் பயணிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் உங்களது வாய்ப்புகளை பயன்படுத்தி, சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை சொல்லும் படங்கள் எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “இதுபோன்ற குறும்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன். காரணம், இதுபோன்ற ஒரு குறும்படம் மூலம் தான் நானே இயக்குநராக உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது ராவுத்தர் சார், விஜயகாந்த் சார் எல்லாம் பழக்கம். திரைப்படக் கல்லூரியில் படித்து முத்த உடனேயே கதை சொல்ல முயற்சித்தேன் . அப்போது ராவுத்தர் சாரை பார்த்து விஜயகாந்த் சாரிடம் கதை சொல்ல நேரம் கேட்கும் போது, அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என்பார். பிறகு மறுபடியும் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்றால், அப்போது தம்பி அண்ணன் தேதி இல்லை, பிஸியாக இருக்கிறார் இரண்டு ஆண்டுகள் போகட்டும் என்பார். இப்படியே பல வருடங்கள் போய் விட்டது. இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் ராவுத்தர் இதை தான் சொல்வார், என்பது தெரிந்து விட்டது. உடனே நான் ஒரு குறும்படம் இயக்கிவிட்டு, அவரை சந்திக்க சென்றேன். அப்போதும், தம்பி தேதி இல்லை, என்று சொன்னார். தேதி கேட்பதற்காக வரவில்லை, குறும்படம் ஒன்று இயக்கியிருக்கிறேன், அதை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் சரி என்று அந்த குறும்படத்தை பார்த்தார். பார்த்துவிட்டு மறுநாளே தம்பி அண்ணனை வைத்து ஒரு படம் பண்ணலாம், இப்பவே தொடங்கிடு என்று சொல்லி பூஜை போட்டு விட்டார். இரண்டு வருடங்களுக்கு தேதி இல்லை என்று சொன்னவர், என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு இரண்டு வாரங்களிலேயே படத்தை தொடங்க சொல்லி விட்டார். அந்த அளவுக்கு ஒரு குறும்படம் எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதனால் தான் இதுபோன்ற நிகழ்வுகளில் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.

குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. முழுநீள படங்கள் எடுக்கும் போது எதாவது ஒரு காட்சியை சுவாரஸ்யமாக சொன்னால் போதும். ஆனால், குறும்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யம் இருக்க வேண்டும். விளம்பர படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு பிரேமிலும் கதை சொல்ல வேண்டும். எனவே இதுபோன்ற குறும்படங்களை சிறப்பாக எடுப்பவர்கள் நிச்சயம் நல்ல திரைப்படங்களை எடுப்பார்கள். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “செல்வமணி சார் சொன்னது போல் குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. முழுநீள படங்கள் எடுக்கும் போது நமக்கான நேரம் அதிகமாக இருக்கும், ஆனால் குறும்படங்களில் குறுகிய நேரத்தில் கதை சொல்ல வேண்டும் என்பது சவாலான விசயம். செல்வமணி சார் 30 ஆண்டுகளுக்கு முன்பே குறும்படம் எடுத்து அதன் மூலம் வாய்ப்பு பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் குறும்பட கலாச்சாரம் வந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவர் அப்போதே அதை செய்திருக்கிறார்கள் என்றால், இப்போது குறும்படம் எடுக்கும் அனைவருக்கும் அவர் தான் முன்னோடி, அவர் தான் குரு.

நான் பல குறும்பட போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறேன், அப்போது அங்கு பார்த்த படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். சில நிமிடங்களில் ஒரு முழுநீள படத்திற்கான கதையை சிறப்பாக சொல்வார்கள். நீங்களும் அப்படி தான் உங்களது குறும்படங்களை சிறப்பாக இயக்கியிருக்கிறீர்கள், உங்களுக்கு என் வாழ்த்துகள். இங்கு வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. இங்கு ஒரு நடுவருக்கு பிடிக்காத குறும்படம், மற்றொரு போட்டியில் உள்ள நடுவருக்கு பிடிக்கும். இது அவர்களது தனிப்பட்ட தேர்வு தான். எனவே வெற்றி, தோல்வி பற்றி யோசிக்க கூடாது, இந்த போட்டியில் பங்கேற்றதே பெரிய வெற்றியாக பார்க்க வேண்டும். நிச்சயம் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது, வாழ்த்துகள்.” என்றார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், “துஷாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், இந்த நாளில் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுகள். நானும் இதுபோன்ற குறும்படங்கள் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பு பெற்றேன். ராதிகா, விக்ரம் நடித்த டெலிபிலிம் ஒன்றுக்கு முதன் முதலில் இசையமைத்தேன். அதன் பிறகு சித்தி சீரியலில் டைடில் பாடல் போட்டேன். அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. எனவே நானும் உங்களைப் போல் டெலிபிலிம், சீரியல் ஆகியவற்றில் பயணித்தப் பிறகே சினிமா வாய்ப்பு பெற்றதால், நிச்சயம் இந்த குறும்படங்கள் சினிமாவில் உங்களுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் பேசுகையில், “நண்பர் துஷாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுகள். செல்வமணி அண்ணன் சினிமா தொடர்பாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி முதல் ஆளாக வந்து நிற்பார், நாங்களும் அப்படி தான் சினிமாவுக்காக பல நல்ல விசயங்களை செய்துக் கொண்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்ஸியும் இணைந்து பல நல்ல திட்டங்களை உருவாக்கி வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல நல்ல திட்டங்கள் அறிமுகமாகும், அதற்காக நாங்கள் தினமும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், என பல புதியவர்கள் அறிமுகமாக வேண்டும். அதற்கான ஒரு வழிகாட்டுதலாக இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்திய துஷாந்துக்கு வாழ்த்துகள். இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button