Spotlightசினிமா

விக்ரம் பிரபுவின் 26வது படம் தொடக்கம்… யுவன் இசையில் ரோமியோ பிக்சர்ஸ் புதிய ஆக்சன் திரில்லர்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க சந்தையை (Gold Market) மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. தற்போது நடிகர், நடிகையர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் பிரபுவின் 26வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெறும் இந்தப் படம், அவரது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான டாணாக்காரன், சிறை போன்ற படங்களின் மூலம் தனது கதைத்தேர்வில் தனித்துவத்தை நிரூபித்துள்ள விக்ரம் பிரபு, இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கவிருக்கிறார்.

படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ், படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் மிகுந்த கவனத்துடன் படம் உருவாக்கப்படவுள்ளது.

தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றிகரமாக விநியோகம் செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ், இந்தப் படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்குகிறது. வலுவான கதைக்களம், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கமர்ஷியல் அம்சங்களின் கலவையுடன் உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படைப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனுடன், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி மோகன் நடிக்கும் ஒரு திரைப்படமும், ஆகாஷ் முரளி நடிக்கும் மற்றொரு திரைப்படமும் தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button