
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘BANG’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சரிஷ்டா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராம் ஜெகன், கே. விஸ்வநாத், அசோக் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மும்பை, பெங்களூரு, பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
DSR Films, Mobeen Production மற்றும் SAMEER Productions சார்பில் M.D. சலார் பேக் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுபாஷ் இசையமைக்க, சைமன் கே. கிங் பின்னணி இசையமைத்துள்ளார். அமீர்லால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் – ஜே.டி. சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள ‘BANG’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.





