
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கும் புதிய திரைப்படமான ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு, கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
நவம்பர் 6ஆம் தேதி வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், கமல்ஹாசனின் புதிய தோற்றமும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பையும், அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கின்றனர்.
கமல்ஹாசன் – எஸ்.யு. அருண்குமார் கூட்டணியில் உருவாகும் ‘சண்டியர்’ படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.





