
500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘வெகுளி’ (VEGULI) திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய அதிரடி போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
ஒரே ஷாட்டில் உருவான ‘அகடம்’ திரைப்படத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, விறுவிறுப்பான திரில்லர் படமாக ‘வெகுளி’ உருவாகியுள்ளது.
இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன், ஷர்மிளா, பூவையார், டேனி, சாப்ளின் பாலு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, பாய்ஸ் மணிகண்டன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார்.
ஷமீல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நாகார்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பில், விஜயா சரவணன் இணை தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.
தணிக்கைக் குழுவால் ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்களும் டீசரும் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘வெகுளி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





