Spotlightசினிமா

பட்டையை கிளப்பிய ’பட்டாஸ்’ வசூல்!

னுஷ் நடிக்க துரை செந்தில்குமார் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகியிருக்கும் படம் தான் ‘பட்டாஸ்’.

ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசை விவேக்-மெர்வின். தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படம் தொடர் வசூல் வேட்டைகளை நடத்தி வருகிறது. திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button