
காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘டைட்டானிக்’ (Titanic) வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஜானகிராமன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா, ஆஷ்னா சவேரி, ராகவ் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
“கொஞ்சம் காதல்… கொஞ்சம் ஃபீலிங்ஸ்… ஆனால் காமெடி அன்லிமிடெட்!” என்ற உற்சாகமான விளம்பர வரிகளுடன் வெளியாகும் இப்படம், காதலும் கலகலப்பும் கலந்த பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘டைட்டானிக்’ ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளது.
Facebook Comments




