Spotlightசினிமா

ஒரு பறவைக்காக 35 நாட்கள் மின்சாரத்தைத் துறந்த கிராமம்! உண்மைச் சம்பவமாக உருவாகும் ‘கூடு’!

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ (KOODU). அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படம், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தமிழக கிராமம் ஒன்றில் மின்மாற்றிக்குள் கூடு கட்டிய அரிய வகைப் பறவையின் முட்டைகளைப் பாதுகாக்க, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 35 நாட்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருந்த உண்மைச் சம்பவமே இப்படத்தின் கதைக்கரு.

நகைச்சுவை, அன்பு, உணர்ச்சி ஆகியவை கலந்த இப்படத்தில் VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ள இப்படத்தை குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், எம். கணேஷ், சூனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி மற்றும் லிஷா P. சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ‘கூடு’ திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button