
ரஜினி நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம்தான் ‘பேட்ட’. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்க ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ரஜினியின் சினிமா வரலாறில் இதுவே கடைசி படமாக இருக்கும் எனவும், அதன்பிறகு முழுவீச்சில் அரசியல் களம் காணவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதைபடி, ரஜினியை முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடைபெறுகிறதாம்.
இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





