Spotlightசினிமா

”A” பட நாயகன் அசோக் செல்வனின் “வேழம்”!!

K4 Kreations சார்பில் கேசவன் தயாரிக்கும் படம் வேழம். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், மற்றும் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் , ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறும்பட இயக்குனரான சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. SP Cinemas இப்படத்தை வெளியிட இருக்கிறது., வரும் 24 ஆம் தேதி “வேழம்” திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் அசோக் செல்வன் நடிப்பில் ”மன்மதலீலை” திரைப்படம் மார்ச் மாதம் வெளியானது. இப்படத்திற்கு குழந்தைகள் காண முடியாத ”A” தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இதை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படம், மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெற இயலவில்லை.

அதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடித்து ஓடிடியில் வெளியான ”ஹாஸ்டல்” படத்திலும் “A” தர காமெடிகளே அதிகம் வைக்கப்பட்டிருந்தது. இப்படமும் பெரிதளவில் மக்கள் மத்தியில் ஈர்ப்பு பெறவில்லை.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் அசோக் செல்வனின் படங்களால் அவரது மார்க்கெட் சற்று இறங்க துவங்கியிருக்கிறது என்றே கூறலாம்.

அடல்ட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததால் அசோக் செல்வன் அடல்ட் செல்வனாக மாறிவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்துவங்கியுள்ளது. இதனாலேயே, குடும்பங்களாக அசோக் செல்வனின் படங்களை பார்க்க மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

தொடர்ந்து இது போன்ற படங்களில் நடித்து வந்தால் அசோக் செல்வன் அடல்ட் செல்வன் என்று அழைக்கப்படும் அளவிற்கு சூழல் ஏற்படலாம்.

அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான் என்று கூறுவது போல், தொடர்ச்சியாக அடல்ட் படங்களை கொடுத்தால் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தான் சந்திக்க இயலும் என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் தான் அசோக் செல்வனின் நடிப்பில் வேழம் திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படமாவது அசோக் செல்வனுக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close