Spotlightசினிமா

பிக் பாஸிலிருந்து சீக்கிரமே வெளியேறுவேன் என நினைத்தேன்! அர்ச்சனா ஓபன் டாக்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளரான அர்ச்சனா ரவிச்சந்திரன், தான் டைட்டில் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, ‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாவது சீசனுக்கான ஆடிஷனில் அர்ச்சனா கலந்து கொண்டுள்ளார்.

அந்தத் தொடரில் கௌரி நடித்த கதாபாத்திரத்திற்காக அவர் ஆடிஷன் கொடுத்துள்ளார். மேலும், அன்றைய தினம் காலையிலேயே வெப் தொடரில் நடிப்பதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதத்தின் மத்தியிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகிவிடுவேன் என்றும், அதன் பிறகு வெப் தொடரில் நடிக்க முடியும் என்றும் அர்ச்சனா படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் எப்போது வெளியேறுவார் என்பது தெரியாததால், எந்த உறுதியும் அளிக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தான் எலிமினேட் ஆகிவிடுவேன் என்பதில் அப்போது உறுதியாக இருந்ததாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

விரைவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி, வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என நினைத்த அர்ச்சனா, இறுதியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக உருவெடுத்தார்.

தனது பிக் பாஸ் பயணத்தின் தொடக்கத்தில் வெற்றி பெறுவேன் என்ற எண்ணமே தனக்கு இல்லை என்பதை இந்தப் பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button