Uncategorized

இராஜேந்திர சோழன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு பெருமை – ஆதேஷ் பாலா!!

மிழ் நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அதன் ஆதரவுடன் மாபெரும் மேடை நாடகமாக வருகிறது மன்னர் ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு. சென்னை யோகஸ்ரம் டிரஸ்டியின் சார்பாக அதன் நிறுவனர் டாக்டர் ஏ பி வைத்தீஸ்வரன் புதிதாக துவங்கி உள்ள நாடக தயாரிப்பு நிறுவனம் தான் சென்னை ட்ராமாஸ்.

இதில் முதல் படைப்பாக வருகிறது மும்முடி சோழன் வரலாற்று நாடகம். உன்னோடு கா திரைப்பட இயக்குனர் தஞ்சை RK இந்த வரலாற்று நாடகத்தை மேடையில் ஒரு சினிமாவை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் நாடக ஆக்கம் மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

நாம் கேட்ட வரை இதன் கதை என்பது, மன்னராக பதவியில் தொடங்கி அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை என தலைமுறைகள் வாழ, பாதை வகுத்து தந்த இராஜராஜன் தன் வாழ்விலே எப்படி சிவனடியாராக நிலை கொண்டார் என்பதை மிக பிரமாண்ட முறையில் அதிக பொருட் செலவில் மேடையில் அரங்கேற்றப்படும் நாடகம் தான் இந்த மும்முடி சோழன்.

இதை பற்றி நடிகர் ஆதேஷ் பாலா நம்மிடம் சொல்லும் போது,” சமூக நாடகம் சினிமாவில் நடிப்பதை விட இந்த வரலாற்று நாடகத்தில் நடிப்பது மாபெரும் சவால் என கூறினார். இதில், தான் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான இராஜேந்திர சோழன் மக்களின் மனதை விட்டு நீங்காத வரலாற்று மன்னன். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஏற்று நடிப்பதில் தனக்கு பெருமை என உணர்வு பொங்க பேசினார், மேலும் நாடகத்தின் முன்னோட்டமாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் இராஜேந்திர சோழன் குதிரையில் வரும் சிறப்பு காட்சிக்காக குதிரை ஏற்றம், வாள் பயிற்சியை முறையாக கற்று நடிப்பதாக மகிழ்வுடன் கூறினார்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களின் பார்வையில் இந்த நாடகம் தொடர்பாக இதன் கலைஞர்களை அழைத்து பாராட்டியது கூடுதல் சிறப்பு என நாடக குழுவினர்கள் மகிழ்ந்தனர். இந்த நாடகத்தில் வரும் சிறப்பு பாடலை திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.

ஜூன் 10 வரும் சனிக்கிழமை, இராஜாஅண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு இந்த நாடகத்தை கண்டுகளிக்கலாம்.

நடிகர்கள்

இராஜ ராஜசோழன் – ‘முத்துக்குமார்’

பஞ்சவன் மாதேவி – ‘சுஜாதா பாபு’

கருவூரார் சித்தர் – ‘ஏ. பி. வைத்தீஸ்வரன்’

குந்தவை நாச்சியார் – ‘ரேவதி’

இராஜேந்திர சோழன் – ஆதேஷ் பாலா

முதன்மை அமைச்சர் – விவேக்சின்ராசு
சேனாதிபதி – மு.அருண் குமார்
மந்திரி – தினேஷ்
ரவிதாசன் – சிங்கராஜா
பரமேஸ்வரன் – கணேசன்
சோமன் – ரமனன்
பாஸ்கர ரவி வர்மன் – பிரபாகரன்
மேலை சாளுக்கிய மன்னன் – விஜயகுரு

Facebook Comments

Related Articles

Back to top button