
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் நடிகராக இருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்மன்றத்தின் பொதுச் செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை மணம் புரிந்துள்ளார்.
அன்பால் இணையும் விதமாக தன் வாழ்வின் இணையை, சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார்.