Spotlightசினிமா

மனதை உருக வைத்த அருண் விஜய்.. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்றாங்க !!

ன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் நேற்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.

அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.

 

நேற்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

 

நட்சத்திரங்களின் பிறந்தநாள் என்றால் கோடிகளை கொட்டி மதுபான ஆட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில், தனது பிறந்தநாளை ஆதரவற்றோருடன் அருண் விஜய் கொண்டாடியது அனைவராலும் பெரிதாக பாராட்டும்படியாக இருந்தது.

இணையத்தில் அநேக நபர்கள் தங்களது வாழ்த்துகளை அருண்விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button