பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது வர்மா. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த வர்மா.
இப்படத்தினை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் துருவ் ஒப்பந்தமாகியுள்ளார்.
22 வயதான துருவ் விக்ரமின் தோற்றம் இந்தப் படத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாலேயே அவரைத் தேர்வு செய்ததாகப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நிகில், வருண் சந்தோஷ், ரானா டகுபதி, சாய் பல்லவி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இணையவுள்ளதாகத் தெலுங்குத் திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் கம்முலா தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments