
மாரி 2, எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை என கைக்கடங்கா படங்களை வரிசையாக வைத்துள்ள தனுஷ் அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்லவிருக்கிறாராம்.
`ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ் தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
`ராஞ்சனா’ படத்தின் 2 ம் பாகம் தான் இது என்கிறார்கள். முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம் இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் நடிக்க போகிறார் தனுஷ்.
Facebook Comments