Spotlightசினிமா

சிம்புவின் அடுத்த அதிரடி கூட்டணி!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது செக்க சிவந்த வானம். இப்படத்தில் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் சிம்பு தனது பகுதியை சில தினங்களுக்கு முன் முடித்துள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார்.

இப்படம், மங்காத்தா, பில்லா படங்களின் தொடர்ச்சி கதை இல்லை எனவும் முழுக்க முழுக்க புதுமையான கதையோடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button