
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் அறிமுக இயக்குனர்களால் வந்தாலும், அதில் ஒரு சில படங்களே கதை, திரைக்கதையைக் கொண்டு நல்ல முறையாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அதில், ஒரு படமாக வந்தது தான் ‘அருவி’. இதில் கூறப்பட்ட கதை நல்ல முறையில் மக்களிடையே சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல், அதில் நடித்த அதிதி பாலன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
சிறந்த நடிகையாக பல விருதுகளையும் வாரி குவித்தார். ஒரு படத்தில் நல்ல ஒரு பெயரை சம்பாதித்தால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். அப்படியாக பல படங்கள் வரிசை கட்டி வந்தாலும், இதுவரை ஒரு கதையை கூட ஓகே சொல்லாமல் வைத்திருக்கிறாராம் அதிதி பாலன்.
கதையின் உயிரை வைத்து தான் படத்தில் தான் நடிப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறாராம். இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டிருக்கிறாராம். அதில் எதுவும் அவருக்கு பிடிக்கவில்லையாம்.
மேலும், கோடிகள் சம்பளாக பெற வாய்ப்பு வந்தும், கதைதான் முதலில் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அதிதி…
ஒரு படம் ஹிட் அடித்தால் பத்து படங்களில் நடித்துவிடும் நடிகைகள் இருக்கும் சினிமாவில் அதிதியின் இந்த செயல் பாராட்டுக்குரியது தான்…





