
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. தனி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு இரண்டு மொழிகளிலும் மார்க்கெட்டை கொண்ட அனுஷ்காவுக்கு 37 வயது ஆகிறது.
அவருக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முயற்சித்தனர். இத்தனை ஆண்டுகளாக திருமண பேச்சை எடுத்தால் பிடிகொடுக்காமல் பேசிவந்த அனுஷ்கா தற்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தெலுங்கு சினிமாவில் தகவல் வந்துள்ளது. மகள் சம்மதம் சொன்ன கையோடு அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.
அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை தேடும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டே அனுஷ்காவுக்கு திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பின் திரைப்பட வாய்ப்புகள் குறையுமே என்று தள்ளி போட்ட அனுஷ்கா சமந்தா, ஜோதிகா போன்றோர் திருமணத்துக்கு பின்னும் கூட வெற்றிகரமாக நடிப்பதை பார்த்து மனம் மாறி இருக்கிறார்.