Spotlightசினிமா

சீனு ராமசாமி இயக்கத்தில் முபாரக் தயாரிப்பில் உருவான ”இடிமுழக்கம்”; 13 ஆம் தேதி வெளியாகிறது முதல் பார்வை!!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கும் படம் தான் “இடிமுழக்கம்”.

ஜி வி பிரகாஷ்குமார், காயத்ரி இருவரும் நடிக்க ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை முன்னணி நிறுவனமான சோனி நிறுவனம் கைப்பற்றிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியது.

அழகான வாழ்வியலை எப்போதும் கண்முன்னே கொண்டு வருவதில் வல்லவரான இயக்குனர் சீனு ராமசாமி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

விரைவில் இப்படம் திரைக்கு வரும் எனவும் இயக்குனர் கூறியிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button