Spotlightசினிமா

சித்ரா தற்கொலை; ஹோட்டல் அறையில் நடந்தது என்ன..?? முழு விபரம்!

சித்ரா என்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் முல்லை என்ற பெயரில் நடித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரையான்சாவடியை சேர்ந்த ஹேமநாத் வ/32 என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

EVP Film City ல் Vijay TV யின் பாண்டியன் ஸ்டோர் நாடக படப்பிடிப்பு நடந்து வருவதால் தினமும் திருவான்மியூர் சென்றுவர முடியாததால் கடந்த 04.12.20 ம் தேதி முதல் பெங்களூர் பைபாஸ் குயின்ஸ்லேண்ட் அருகே உள்ள Pleasant Day Hotel ல் Room.No: 113 ல் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று 09.12.20 ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு படப்பிடிப்பு முடித்து ஹோட்டல் ரூமிற்கு வந்த சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் ஹேமநாத் அறையின் கதவை தட்டியுள்ளார், கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியர் திரு.கணேஷ் என்பவரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவைமூலம் தனக்கு தானே தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.

ஹோட்டல் ஊழியர்களுடன் சேர்ந்து பிரேதத்தை கீழே இறக்கி பின்பு 03.30 மணிக்கு 100 க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற, T-16 நசரத்பேட்டை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி T-16 Nazarathpet Ps Crime No : 756/2020 U/S 174 CRPC ( Hanging) ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close