Spotlightசினிமா

மாநாடு, டான், விக்ரம் தொடர்ந்து தமிழ் சினிமாவை தூக்கி பிடித்த “திருச்சிற்றம்பலம்”!!

யக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்கடந்த வியாழன் அன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”.

தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா மற்றும் ப்ரியா ப்வானி சங்கர் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து பல திரையரங்குகளில் அரங்குகள் காட்சிகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

சில நாடுகளில் இதுவரை தனுஷ் படத்திற்கு இல்லாத அளவிற்கு வசூல் ரெக்கார்ட் படைத்தும் வருகிறது இப்படம்.

தமிழில் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்துள்ளது. இவ்வருடத்தில் வெளியான மாநாடு, டான் மற்றும் விக்ரம் படங்கள் வசூலிலும் சரி, ஓடிய நாட்களிலும் சரி மிகப்பெரும் சாதனை படைத்தது. இந்த படங்களை, அனைத்து தரப்பு ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடினர். அந்த வரிசையில் இணைந்தது திருச்சிற்றம்பலம் படமும்.

வார விடுமுறை தினங்களை கடந்தும் தொடர்ந்து மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button