
கடந்த 48 நாட்களாக மிகவும் பரபரப்பாகவும், மிகவும் பக்தியுடன் காஞ்சிபுரம் மாவட்டமே ஸ்தம்பிக்க வைத்த நிகழ்வுதான் அத்திவரதர் தரிசனம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் விதவிமான பூ மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு அத்தி வரதர் அருளித்தார்.
அத்தி வரதரை தரிசிக்க வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்தனர்.வைபவ கடைசி நாளான நேற்று பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நேற்று 3.50 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
தரிசனம் நடைபெற்ற 48 நாட்களில் ஒரு கோடியே 45 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் நடை சாற்றப்பட்டது.
நாளை காலை மீண்டும் அத்தி வரதர் குளத்திற்கு செல்லவிருக்கிறார். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.