Spotlightசினிமா

எந்த கதாபாத்திரத்திற்கும் நான் ரெடி.. மகிழ்ச்சியில் லதா ராவ்!

கடிகார மனிதர்கள் படத்தில் கிஷோருடன் ஜோடியாக நடித்திருந்தார் லதா ராவ். இந்த கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,. ‘ சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.

அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8, விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button