Spotlightஇந்தியா

கடைசி வரை திக்.. திக்… நூலிழையில் ஜெயித்த ரோஜா!

ந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.

அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலி பானுபிரகாஷை விட 2681 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடைசி நேரம் வரை திக். திக்…. நிமிடங்களாகத்தான் ரோஜாவின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஏற்கனவே நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button