
நாகர்கோவில் பகுதி தான் படத்தின் கதைக்களம். மிகப்பெரும் ரெளடியான சரத்குமார், மோட்டார் படகுகளை ரிப்பேர் செய்யும் வேலையை செய்து வருகிறார். போதைப் பொருளை கடத்துவது, தனக்கு எதிரி என்று தெரிந்த பின்பு அவர்களை கடலுக்குள் கொண்டு சென்று கொலை செய்வது என தனக்கென்று ஒரு ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்.
இவரது ஒரே மகளான தேவிகா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் சரத்குமார் . தேவிகா தனது கல்லூரியில் படிக்கும் இந்திரஜித்தை காதலிக்கிறார். இருதலை காதலாக இந்த காதல் வளர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவனை காதலிக்கிறாள் என்று தெரிந்து கோபமடைகிறார் சரத்குமார்.
இந்திரஜித்தை கடத்துகிறார் சரத்குமார். அவரை கடலுக்குள் கொண்டு செல்கிறார். நடுக்கடலில், பெரிய படகொன்றில் சரத்குமாரும் இந்திரஜித்தும் இருக்கின்றனர்.
தனது மகளை காதலித்ததற்காக இந்திரஜித்தை கொலை வெறியோடு தாக்குகிறார் சரத்குமார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

முரட்டுத்தனமான வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் சரத்குமார். தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்திற்காக அவரது காதலனை கொல்ல நினைப்பதும் அதன் பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றம் படத்தின் போக்கை மாற்றுகிறது.
தேவிகாவை காதலிக்கும் காதலனாக இந்திரஜித் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் பெரிதான எந்த ஒரு வசனங்களும் இல்லாமல் தனது நடிப்பாலே கதாபாத்திரத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
நாயகியான தேவிகா தேவதை போன்று காட்சியளித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் தனது சிரிப்பாலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பங்கை கொடுத்திருக்கிறது. அதிலும், இரண்டாம் பாதியில் ஒளிப்பதிவு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது
நல்லதொரு மேக்கிங்கிய கொடுத்ததை இயக்குனர் திரைக்கதையில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தயான் சொல்ல வேண்டும் . இரண்டாம் பாதியில் இன்னும் சற்றும் திரைக்கதையை வேகப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.
மற்றபடி
ஆழி – படபடப்பு





