Spotlightசினிமா

பார்த்திபனுக்கு ”இரவின் நிழல்”, ஆதேஷ் பாலாவிற்கு “அந்த இரவில்” – சாதனைக்கு வித்திடும் சாதிக்க பிறந்தவர்கள்!

பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உலக சாதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் பட விழாவிலும் “இரவின் நிழல்” திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையில் பார்த்திபனின் இந்த முயற்சிக்கு பெரிதாக பாராட்டு கிடைத்து வரும் நிலையில், நடிகர் ஆதேஷ் பாலாவையும் அனைவரும் பெரிதாக பாராட்டி வருகிறார்கள்.

தன்னுள் இருக்கும் நடிகனை தானே இயக்கி வெளிக்கொண்டு வர அவ்வப்போது குறும்படங்களை இயக்கி வருபவர் நடிகர் ஆதேஷ் பாலா. இவர், முண்டாசுப்பட்டி, மம்பட்டியான், பேட்ட உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

அதுமட்டுமல்லாமல், விரைவில் வெளியாக இருக்கும் கள்ளபார்ட், அந்தகண், பொன்னியன் செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர், தற்போது இயக்கி நடித்திருக்கும் ”அந்த இரவில்” என்ற குறும்படம் பெரிதாக அனைவராலும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது. ஏனென்றால், இக்குறும்படத்தில் பத்து நிமிடம் ஒரே ஷாட்டில் மூன்று கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார் ஆதேஷ் பாலா.

பார்த்திபனின் 90 நிமிட சிங்கிள் ஷாட் ”இரவின் நிழலை” கொண்டாடும் பலரும் ஆதேஷ் பாலாவின் பத்து நிமிட சிங்கிள் ஷாட் படமான “அந்த இரவில்” குறும்படத்தையும் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் இருவரின் இந்த அசாத்திய முயற்சிக்கு வாழ்த்துகள்.

இக்குறும்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசையமைத்திருக்கிறார்.

இக்குறும்படத்தின் முதல் பார்வையை திரையுலகைச் சேர்ந்த சுமார் 50 பேர் வெளியிட இருப்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவலாகவும் இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button