
சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” போன்ற படங்களை இயக்கியவர் தான் ஹலிதா ஷமீம்.
ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ளார். இது அவரது திரைப்படமான ‘மின்மினி’ பற்றியது, அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகள் முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதை. இதன் முதல் பகுதியை, அவர் 2015 ஆம் ஆண்டில், குழந்தை பருவ பகுதிகளை படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்து தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை விட்டுவிட்டார்.
இந்த நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டராக உள்ளார்.
மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார். ‘மின்மினி’ திரைப்படம் மிகவும் தீவிரமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்.
மின்மினி படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“மின்மினி” படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.





