Spotlightசினிமா

’தர்பார்’ திரைப்படத்துடன் அரங்கம் அதிர வெளியாகிய ‘அகோரி’ ட்ரெய்லர்!

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்
படமாக்கப்பட்டது.

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர் 144 பட நாயகியும் கூட.

இவர்களுடன் மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,
கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீம் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார்
இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன்.

‘அகோரி’ படத்தின் ட்ரெய்லர் ‘தர்பார்’ படம் வெளியாகும் அனைத்து திரைகளிலும் வெளியாகிறது.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

‘ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.
குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button