தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. இவரின் மகன் தான் உமாபதி. ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கும், தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். தங்களது காதலை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவித்ததால், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
உமாபதி எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் அர்ஜுனுக்கு பிடித்தும் போக இதுவும் ஒரு காரணமாம்.
Facebook Comments