
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா நடிக்க கடந்த சனிக்கிழமை வெளிவந்த திரைப்படம் தான் ‘நாடோடிகள் 2’.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் நந்தகோபால் இப்படத்தை தயாரித்திருந்தார். ஜஸ்டின் பிரபாகர் இசையில் இப்படம் உருவாகியிருந்தது.
சசிகுமார், அதுல்யா, அஞ்சலி, பரணி ஆகியோரின் மிகையில்லாத நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக இப்படம் கவர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனியின் விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.
இனிவரும் தலைமுறை சாதியற்ற தலைமுறையாக வளரட்டும் என்ற ஓட்டம் படத்தை பார்த்து முடிந்ததும் கைதட்ட வைத்துள்ளது.
முக்கியமாக இளைஞர்களின் பேராதரவை பெற்றதால், திரையரங்குகளின் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
Facebook Comments





