Spotlightசினிமா

திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற இளம் பெண்ணை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைக்களம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவளை யார் தொட்டாலும் மின்சாரம் தாக்குவது போன்ற அதிர்ச்சி ஏற்படும் விசித்திரமான நிலை காரணமாக, ஊர் மக்கள் அவளை விலகியே பார்க்கின்றனர். இந்த ரகசியத்தை மறைத்து, அவரது குடும்பத்தினர் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கதையை நகர்த்துகின்றன. இந்த அசாதாரணமான பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

கிராமத்து இளைஞராக திரு வீர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இவர்களுடன் முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சி.ஹெச். குஷேந்தர் கிராமத்து அழகியலை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் ட்ரெய்லருக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றன. கலை இயக்குநராக திருமலா எம். திருப்பதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீ வர பிரசாத் பணியாற்றியுள்ளனர்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் வித்தியாசமான கற்பனை அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ட்ரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.

‘ஓ! சுகுமாரி’ திரைப்படம் வருகிற ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள்:

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

  • தயாரிப்பாளர்: மகேஸ்வரா ரெட்டி மூலி
  • எழுத்து & இயக்கம்: பரத் தர்ஷன்
  • ஒளிப்பதிவு: சி.ஹெச். குஷேந்தர்
  • இசை: பரத் மஞ்சிராஜு
  • கலை இயக்கம்: திருமலா எம். திருப்பதி
  • படத்தொகுப்பு: ஸ்ரீ வர பிரசாத்
  • மக்கள் தொடர்பு: யுவராஜ்
  • மார்க்கெட்டிங்: ஹேஷ்டாக் மீடியா

Facebook Comments

Related Articles

Back to top button