
நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘டேர்டெவில்’ (Daredevil) திரைப்படத்தின் பூஜை நவம்பர் 2ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் அன்றைய தினமே படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விடுமுறையை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நவம்பர் 13 அல்லது 16ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவரது காட்சிகள் அஜித்துடன் இணைந்து முதலில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுநீள கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





