Spotlightசினிமா

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் கதை வெளியானதா? போலீஸ் பின்னணியில் அதிரடி திரில்லர்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பப் பின்னணியில் ஆக்‌ஷன், காமெடி மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த திரைப்படமாக ‘சீன்’ உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்டு கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முயற்சிக்கும் முன்னாள் உயர் காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது.

காவல்துறையின் எந்தவித ஆதரவும் கிடைக்காத சூழலில், அந்த முன்னாள் அதிகாரி தனியாகக் களமிறங்கி பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முக்கிய கதைக்களமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா மற்றும் லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுஷின் ஷியாம் இசையமைக்கும் இப்படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகவுள்ள இந்தப் படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button