
தமிழகம் முழுவதும் இனி 24 மணி நேரமும் திரையங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் மாதன் 10 ஆம் தேதி வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தை இரவு 12 மணிக்கே திரைக்கு கொண்டு வர படக்குழு ப்ளான் செய்து வருகிறார்களாம்.
தாதா 87 படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ..
இவர், அடுத்ததாக ஒரு திரில்லர் கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதற்கான பணிகளிலும் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தை, இரவு நேரத்தில் இப்படத்தை பார்த்தால் அதன் முழு உணர்வையும் உணர முடியும் என்ற காரணத்தினால், இரவு 12 மணிக்கு இப்படத்தை திரையிட இயக்குனர் விஜய் ஸ்ரீ முடிவெடுத்து அதன் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது, அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் இரவு 12 மணிக்கு வெளியாக இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் வழியில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாவது அனைவருக்கும் கொண்டாட்டம் தானே…..
Hjkskskkddmsnsklsjsgs





