Spotlightசினிமாவிமர்சனங்கள்

டைனோசர்ஸ் – விமர்சனம் 3.5/5

ஹீரோவாக அறிமுகம் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டைனோசர்ஸ்”. ட்ரெய்லரில் ஆரம்பித்து படத்தின் க்ளிம்ப்ஸ் வரை நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது..

எழுந்த எதிர்பார்ப்பை டைனோசர்ஸ் எதுவரை பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்…

கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய் கார்த்திக் இருவரும் மகன்களாக வருகின்றனர். ரிஷியின் உயிர் நண்பன் மாறா… பிரபல ரெளடியான மானேக்‌ஷாவிடம் அடியாளாக இருந்து, திருமணம் ஆனதும் திருந்தி தன் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மாறா.

ரெளடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக, பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது டீமை சரண்டர் ஆக சொல்கிறார் மானேக்‌ஷா. தனது நண்பனுக்காக அந்த கொலை பழியை வாங்கிக் கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறார் அட்டு ரிஷி.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் அருண் மற்றுமொரு ரெளடி. இவரிடம் சிக்கி படுகொலை செய்யப்படுகிறார் மாறா. இவரின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு காரணமாகி விடுகிறார்..

கடைசியாக மாறாவின் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா.? இந்த ப்ளான் யார் போட்டது.?? உதய் கார்த்திக் எப்படி இவர்களின் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆனார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் உதய் கார்த்திக், மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் உதய் கார்த்திக். அழகாக வந்து ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் சாய் பிரியா தேவா. இருவருக்குமான காதல் காட்சிகள் அழகு. காதலை சொல்லும் விதம் க்யூட். பைக்கில் செய்யும் ஸ்டண்ட் ரசிக்க வைத்தது…

முதல் பாதி முழுவதையும் மாறா கட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரை கொல்வதற்கு முன்பு பேசும் வசனங்கள் வீரமாய் நிற்கிறது. வெட்டுப்பட்டு எழுந்து நின்று ஒரு ஆட்டம் போட்டது சினிமாவில் அது புதுசு.. படபடப்பு, வீரம், மனைவிக்காக ஏங்கியது, வாழ்க்கையை பார்த்து பயந்தது என கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்தையும் கனக்கச்சிதமாக கொண்டு வந்து நிவர்த்தி செய்திருக்கிறார்.

கொடுக்கப்பட்ட காட்சிகளை அழகாக செய்து முடித்திருக்கிறார் அட்டு ரிஷி. முதல் காட்சியிலேயே தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலை பிடித்து பேசும் வசனம் அல்டிமேட்.. நட்பிற்காக செய்யும் செயல் அப்ளாஷ்…

அம்மாவாக நடித்த ஜானகி, வீரமாய் கம்பீரம் காட்டியிருக்கிறார். தனது மகனின் வீரத்தை பேசும் போது கண் இமைக்காமல் திரையை பார்க்கும்படியான நடிப்பைக் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்…

படத்தின் மிகப்பெரும் தூணாக நின்றது போபோ சசியின் இசை மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு தான்..

இதுவரை கேட்டிறாத தனித்துவமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருந்தார் இசையமைப்பாளர் போபோ சசி..

கிணற்றுக்குள் கிணறு, மாறாவை கொல்வதற்கு போடப்படும் ஸ்கெட்ச், க்ளைமாக்ஸில் வெடியை வைத்து ரெளடிகளை விரட்டுவது, படத்தின் முதல் காட்சியான பேருந்து சண்டை, விமானத்தின் நிழல், மாறாவின் கொலைக்குள் யதேட்சையாக உதய் கார்த்திக்கை உள்ளே கொண்டு வந்தது, விஜய் சேதுபதி முத்தம் என பல இடங்களில் ரசிக்கும்படியான காட்சியைக் கொடுத்து கைதட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் மாதவன்…

கதையின் ஓட்டத்தில் சற்று மெனக்கெட்டிருந்தால் டைனோசர்ஸின் சத்தம் இன்னும் அதிகமாகவே கேட்டிருந்திருக்கும்… ஆங்காங்கே மக்களின் அரசியல் பேசும் வசனங்கள் கைதட்ட வைத்திருக்கின்றன.

கதை, எடுக்கப்பட்ட விதம், வசனங்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, டைனோசர்ஸை நிச்சயம் ரசிக்கலாம்…

வட சென்னையில் எடுக்கப்படும் வழக்கமான படமாக இல்லாமல், தனித்துவமான படமாக வந்து தனது வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது இந்த “டைனோசர்ஸ்”.

Facebook Comments

Related Articles

Back to top button