
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் ஜோத்பூர் நகரில் மிக பிரமாண்டமாகவும், ஆடம்பரமாகவும் திருமணம் நடைபெற்றது.
தற்போது வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளையும் முக்கியமான விஷயங்களில் அனுசரித்துப் போவதும் தான் அன்பை அதிகரிக்கும் என்ற முடிவுடன் அவர்களின் வாழ்க்கை தொடங்கியது.
அதனைச் சார்ந்து அவர்கள் தங்களுக்கிடையே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அதனை மிகவும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறார்களாம். இந்நிலையில் நிக் ஜோன்ஸ் போட்ட ஒரு பெட்ரூம் ரூல் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகியிருக்கிறது.
இருவரும் அறவே படுக்கையறைக்குள் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்பதும் படுக்கையறைக்குள் செல்ஃபோனை எடுத்துக்கொண்டே வரக்கூடாதென என்பதும் தான் ரூல். எப்போதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். டிவிட்டர் என சமூக வலைதளங்களில் பொழுதைக் கழித்துவரும் செல்ஃபோன் பைத்தியமான பிரியங்கா சோப்ராவும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.




