
வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 62வது படத்தையும் ஹச் வினோத்தே இயக்கவிருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.
இப்படத்தினைத் தொடர்ந்து ஏகே 62 படத்தை யார் இயக்குகிறார், யார் தயாரிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு சில தினங்களாக ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதற்கான விடை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியானது.
அஜித்தின் 62 வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம். அந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஏற்றிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும், அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும். படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
அஜித்தோடு இணைந்து பணியாற்றுவதில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸுடன் அஜித் இணைந்திருப்பதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.