Spotlightசினிமா

ஆர் ஜே பாலாஜி இயக்க போனி கபூர் தயாரிக்க உருவாகியுள்ளது “வீட்ல விசேஷம்”!

யாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க விரைவில் “வீட்ல விசேஷம்” படம் வெளிவரவுள்ளது. இந்தப் படம், இந்தி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும், RJ பாலாஜி-N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மூலம் N.J.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் RJ பாலாஜி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். தவிர, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை KPAC லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வ RK (எடிட்டிங்), கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல் (கதை), திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (விஎஃப்எக்ஸ்), ராஜராஜன் கோபால் (DI கலரிஸ்ட்), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), P. செல்வ குமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்),சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), MK சுரேந்தர், J ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V, TS கோபி, N சிவகுரு, R குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன் (திரைக்கதை குழு) , RJ பாலாஜி மற்றும் நண்பர்கள் (திரைக்கதை & வசனம்) இந்த திரைப்படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

பொதுவாக, பெரும்பான்மையான திரைப்படங்கள் கதாநாயகர்களை போலீஸ்காரர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது தீவிரமான பாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கின்றன. மாறாக, வீட்ல விஷேஷம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது, அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை 100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது. இப்படக்குழுவினர் மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் சாராம்சத்தை, பிராந்திய மொழிக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர்.

இது மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தை குடும்ப பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டனர், அந்த வகையில் ஜூன் 17, 2022 ல் மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டை முடித்திருப்பார்கள் என்பதால் அப்போது குடும்பங்களோடு அனைவரும் இப்படத்தை கொண்டாட முடியுமென்று, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

“வீட்ல விசேஷம்” திரைப்படம் வேடிக்கை நிறைந்த குடும்ப பொழுதுபோக்குகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு அசத்தலான விருந்து என்று அவர் உறுதியாக நம்புவதால் தயாரிப்பாளர் போனி கபூர் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட ஆர்வமாக உள்ளார்.

வீட்ல விசேஷம் திரைப்படம் ஜூன் 17, 2022. உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Facebook Comments

Related Articles

Back to top button