
NETFLIX தனது அடுத்த மலையாள திரைப்படமாக, “மின்னல் முரளி” படத்தை அறிவித்துள்ளது.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையுடன், தீமையை எதிர்த்துப் போராடும், உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்களை யார் தான் விரும்புவதில்லை? இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படங்களில் ஒன்றான ‘மின்னல் முரளி’, NETFLIX திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த சூப்பர் ஹீரோ படத்தில், மலையாள நட்சத்திரமான டோவினோ தாமஸ் ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோ மின்னல்முரளியாக நடித்துள்ளார். படத்தில் அவரை ஒரு மின்னல் தாக்க, அதன் மூலம் அவருக்கு பல சூப்பர் பவர் கிடைக்கிறது அதைக்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரசிகர்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோவைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது
படம் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..
மக்கள் தங்கள் வாழ்வுடனும் உணர்வுகளுடனும் நெருக்கமாக உணரும் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க நினைத்தோம். ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் முக்கிய சாராம்சம் ஆக்சன் அதிரடி தான் என்றாலும், எங்களது குறிக்கோள், ஒரு வலுவான கதையின் பின்னணியில் தான் ஆக்சன் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இப்படத்தில் ஆக்சன் இருக்கும் அதே அளவு உணர்வுபூர்வமான கதையும் இருக்கும்.
இப்படம் மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கும், படத்தின் வெளியீட்டுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு கனவுத் திரைப்படமாகும், இறுதியாக எங்கள் படைப்பு Netflix தளத்தில் உலகளவில் வெளியிடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
Weekend Blockbuster நிறுவனம் சார்பில், ஷோபியா பால் கூறியதாவது…
ஒரு தயாரிப்பாளராக, இது எனக்கு மிகவும் சவாலான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் பயணத்தில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த ‘உள்ளூர்’ சூப்பர் ஹீரோ – மின்னல் முரளியை திரையில் கொண்டு வர, நாங்கள் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அனைத்து உபகரணகளையும் சிறப்பான முறையில் ஒன்றிணைத்துள்ளோம். இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது, இது உணர்ச்சி மிக்க மனிதனின் கதை. மின்னல் முரளியை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
Netflix நிறுவனத்துடன் இணைந்து எங்கள் மலையாள படம் வெளிவரவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ” மின்னல் முரளி ” வெறும் ஆரம்பம் தான். அடுத்தடுத்து நிறைய ஆச்சர்யங்கள் அரங்கேறும் என்றார்.
“மின்னல் முரளி” படத்தில் பணிபுரிந்ததை பற்றி டோவினோ தாமஸ் கூறியதாவது…
இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நான் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போய் விட்டேன், என்னுடைய நேரங்கள் அனைத்தையும் இயக்குனருடன் இணைந்து, எவ்வளவு சிறப்பாக இப்படத்தை உருவாக்க முடியுமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. உலகின் இந்த மோசமான சூழ்நிலையிலும் Netflix போன்ற தளங்கள் மூலம் தனது வீட்டில் திரைப்படங்களை பார்த்து ஆதரவு கொடுத்த, அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். Netflix மூலம் “மின்னல் முரளி” பார்க்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
இயக்குனர் பிரதிக்ஷா ராவ், Films and Licensing, Netflix India கூறியதாவது….
மலையாள சினிமா புதுவிதமான கதை சொல்லும் பாணி மற்றும் வியக்கதக்க திரைப்பட உருவாக்க முறைகள் மூலம், பார்வையாளர்களை கட்டிபோட்டுவைத்துள்ளது. மின்னல் முரளி திரைப்படத்தை Netflix-ல் வெளியிடுவதன் மூலம், மலையாள திரைப்பட கதைகளை வெளி உலகிற்கு அறிமுகபடுத்தும் எங்களது நோக்கம் நிறைவேறியதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டோவினோ தாமஸ் நடிக்கும், இந்த சூப்பர் ஹீரோ கதை, பார்வையாளர்களை மகிழ்விக்கும் திரைப்படமாக அமையும்.
காத்திருங்கள் இடியுடன் கூடிய மின்னல் விரைவில் உங்களை தாக்கும், மின்னல் முரளி Netflix தளத்தில் மட்டுமே !
Netflix குறித்து
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.
சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia, TW South @Netflix_INSouth மற்றும் FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.
Weekend Blockbusters பற்றி, 2014-ல் வெளியான பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் இணைதயாரிப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் Weekend Blockbusters தனது திரைப்பயணத்தை துவங்கியது. கேரளாவை தாண்டி முக்கியமான பெரும் நகரங்களில் வெளியாகிய பெங்களூர் டேஸ் திரைப்படம் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும், அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அதற்கு காரணமாக அமைந்தது Weekend Blockbusters நிறுவனம். அவர்களின் இரண்டாவது தயாரிப்பாக, 2016-ல் Dr பிஜு இயக்கத்தில் “ Kaadu Pookkunna Neram “ திரைப்படம், அனைவருக்கும் பிடித்த படமாகவும், விருது வென்ற திரைப்படமாகவும் அமைந்தது.
2017-ல் ஜிபு ஜேகப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான “ Munthirivallikal Thalirkkumbol” திரைப்படம் வணீக ரீதியாக பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து 2018-ல் பிஜு மேனன் நடிப்பில் “ Padayottam” எனும் காமெடி சாலை பயண திரைப்படத்தை உருவாக்கினர். மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான Weekend Blockbusters உடைய “ மின்னல் முரளி “ திரைப்படம், 2021-ல் இந்தியாவின் முக்கியமான மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து, நிவின் பாலி நடிக்கும் “ பிஸ்மி ஸ்பெஷல்” திரைப்படமும் வெளியாகும்




