Spotlightசினிமா

கட்டிப்பிடிக்க சென்ற அமலாபால்… தெறித்து ஓடிய இயக்குனர்!!

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் அமலாபால் நடித்து வெளியான படம் ராட்சசன்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி சந்திப்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமலாபால், ‘ இப்படத்தில் என்னை நடிக்க வைத்த விஷ்ணு விஷாலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நான் கிளம்பும் முன் இயக்குனரை பாசத்தோடு கட்டி அணைக்க முற்பட்டபோது, அவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார். அந்த அளவிற்கு இயக்குனர் மிகவும் நல்லவர். மேலும், பெண்கள் பல இடங்களில் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். #MeToo விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நான் இருப்பேன்’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button