
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ளது ‘சண்டக்கோழி 2’. வரும் 18ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, ‘ 2005 ஆம் வருடம் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.
சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. விஷால் இப்படத்தின் நாயகன், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி எனக்கு ஒரு நல்ல நண்பன்.
எப்போதுமே அடுத்தவர்களின் நலனுக்காகவே யோசித்து கொண்டிருப்பவர். இப்படத்தினை விரைந்து முடிக்க காரணம் விஷாலின் திட்டமிடல் மட்டும் தான்.
விரைவில் விஷால் அடுத்த கட்டத்திற்கு செல்வார். அவருக்கான கூட்டம் நிச்சயம் அவரை பின் தொடரும். அவருக்கான ஒரு தலைமை காத்துக் கொண்டிருக்கிறது.’ என்று கூறினார்.





