Spotlightவிமர்சனங்கள்

பேட்டைக்காளி – விமர்சனம் 3.5/5

ஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ள இணையத் தொடர் தான் “பேட்டைக் காளி”. இதுவரை 4 எபிசோட் வாரம் ஒன்றாக வெளியாகி உள்ளது.

கிஷோர் குமார், ஷீலா ராஜ்குமார், லவ்லின் சந்திரசேகர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஜல்லிக்கட்டையும் காளைகளையும் கொண்டு உருவாகும் ஜாதி மோதல் இவற்றையெல்லாம் மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கபட்டுள்ளது.

தென் மாவட்டமான சிவகாசியில் நடைபெறும் கதையாக இக்கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மண்வாசனை நிறைந்த மண் மனம் மாறாமல் மிகவும் யதார்த்தமான படைப்பாக இந்த பேட்டைக் காளியை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

ஜல்லிகட்டில் அவிழ்த்துவிடப்படும் உயர் சாதியினர் எனக் கருதும் வகுப்பினரின் காளைகளை கீழ் சாதியினர் தொட்டாலோ அல்லது அடக்கினாலோ தனக்கு அவமானம் எனக் கருதுகின்றனர் உயர் சாதியினர்.

வெளிவந்த 4 எபிசோட்களில் காதல், பகை, நண்பனின் துரோகம், வீரம் என அனைத்திற்கும் நன்றாகவே தீணி போட்டிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார்.

கதாபாத்திரங்களின் தேர்வும் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். அதிலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் காட்சியை அழகாகவும் உயிரோட்டமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நான்காவது எபிசோடில் பேட்டைக்காளியின் முழு அவதாரமாய் காட்சியளிக்கும் அந்த காளையின் தோற்றமும் கம்பீரமும் காணும் கண்களுக்கு வியப்பைக் கொடுக்கிறது. ஜல்லிக்கட்டில் தனது திமிலை குலுக்கும் காட்சிகள் நம்மை அறியாமலேயே நமக்குள் வீரம் எழும் அளவிற்கு காட்சிகளை அணு அணுவாக ரசித்து கொடுத்திருக்கிறார் இயக்குன ராஜ்குமார்.

வேல்ராஜ்ஜின் மிரட்டலான ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கனக்கச்சிதம். சந்தோஷ் நாராயணின் இசையில் பின்னணி இசை அதிரடி தான்.

கலையரசன், ஷீலா, வேல ராமமூர்த்தி, பாலஹாசன், லவ்லின், என நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்து அதற்கான கிரீடத்தையும் தட்டிச் சென்றிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இணையத் தொடரில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் என்று பேட்டைக்காளியை கூறலாம்.

பேட்டைக்காளி – ஆட்டத்துக்குச் சிறந்தவன்..

Facebook Comments

Related Articles

Back to top button