
கதையின் நாயகன், சென்னையிலிருந்து தனது அம்முச்சி(பாட்டி) இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு, தனது சிறுவயது தோழியான கதாநாயகியை கண்டதும் காதல் கொள்கிறார். கதாநாயகியும் அவரை காதலிக்கிறார். கதாநாயகிக்கு, கிராமத்தை விட்டுச் சென்று வெளியே சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறார்.
ஆனால், கதாநாயகியின் குடிகார தந்தையோ கிராமத்தை விட்டு வெளியே அனுப்ப முடியாது, தான் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருக்க நிர்பந்திருக்கிறார்.
இதனால் வெறுத்துப்போகும் நாயகி, நாயகனின் உதவியை நாடுகிறார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடிக்க, நாயகியின் தந்தை பஞ்சாயத்திற்கு செல்கிறார். கிராம பஞ்சாயத்தில், கதாநாயகனின் குடும்பம் ஒருபக்கம் கதாநாயகியின் குடும்பம் ஒரு பக்கம் என பிரிந்து நிற்கின்றனர்.
ஐந்து விளையாட்டு போட்டிகளில் யார் அதிகமாக ஜெயிக்கிறார்களோ அவர்கள் சொல்லும்படி நடக்க வேண்டும் என்று பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் கரு நல்லதாக அமைந்தாலும், அதைக் காட்சி அமைப்பதில் இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.. பல இடங்களில் கதை மிகவும் மெதுவாக நகர்வதால், படம் நம்மை சோதிக்கதான் செய்கிறது..
மண் வாசனை கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பதாலும் வசன உச்சரிப்பினாலும் இப்படம் பெரிதாக அதில் நம்மை கவரும்…
சண்டைக் காட்சிகள் கடுப்படைய வைத்துள்ளது.. பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.. ஒளிப்பதிவு கலர்ஃபுல்..
ராஜேஷ் – இயக்கம்
பிரசன்னா – கதை, திரைக்கதை, வசனம்.