
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 படத்தில் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன்பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். விஜயலட்சுமி எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவும் இருந்து வருபவர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவிற்கு பெண்மணி ஒருவர் ”இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்க” என்று கமென்ட் செய்திருந்தார்.
இதனால் கடுப்பான விஜயலட்சுமி அந்த பெண்ணிற்கு பதிலடியாக ”அம்மாவானால் மூலைல உக்காந்து ஐயோ என் லைஃப் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா?நீ வேணும்னா வருத்தப்படு உனக்கு சிலை வைப்பாங்க. இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளவும்” என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.




